புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 47 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 47 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 11 ஆயிரத்து 845 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது 45 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.