Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 5 குழந்தைகள்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… தாய்க்கு காத்திருந்த சோகம்..!!

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஐந்து குழந்தைகளை கொண்ட குடும்பம் ஒன்று தாங்கள் வசித்து வந்த வீடு தீப்பிடித்து எரிந்ததனால் இல்லினாய்ஸில் உள்ள மற்றொரு வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். மேலும் அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில் Loyal Dunigan (2), Jabari Johnson (4), இரட்டையர்களான Nevaeh Dunigan மற்றும் Heaven (7), Deontay Dunigan (9) உள்ளிட்ட ஐந்து குழந்தைகளின் தாயான Sabrina Dunigan வேலை காரணமாக வெளியில் சென்றிருந்தார்.

இந்த நிலையில் அந்த ஐந்து குழந்தைகள் வீட்டில் ஒரு அறையிலும், அவர்களுடைய பாட்டி Vanicia Mosley (கண்பார்வை இல்லாதவர்), தாத்தா Greg Dunigan மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த வீடு அதிகாலை 3 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அதனைக் கண்ட அந்தக் குழந்தைகளின் தாத்தா வீட்டுக்குள் செல்ல முயற்சித்துள்ளார்.

ஆனால் தீ வேகமாக பற்றி எரிந்ததால் அவரால் குழந்தைகளை காப்பாற்ற முடியாத நிலையில் கண்பார்வையற்ற தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியில் குதித்து தப்பியுள்ளார். இந்நிலையில் அந்த 5 குழந்தைகளின் தாய் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் செல்ல முயற்சித்துள்ளார்.

ஆனால் அவராலும் வீட்டிற்குள் சென்று குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு எரிந்துகொண்டிருந்த தீயானது அணைக்கப்பட்டது. ஆனால் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக இறந்து விட்டது. இதையடுத்து பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த மற்ற மூன்று குழந்தைகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.

ஆனால் வீட்டை விட்டு வெளியில் வரும் போது இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக இறந்து விட்டது. இறுதியில் அந்த ஒரு குழந்தையை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். ஆனால் அந்த குழந்தையும் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |