மதுக்கடைகள் மூடப்படுவதாக ஆட்சியர் அறிவித்த நிலையில் ஒரே நாளில் 5 கோடி வரை மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 189 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தினந்தோறும் நடக்கும் விற்பனையை விட தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களுக்கு முந்தைய தினம் வழக்கத்தை விட மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாவது வழக்கம்.
அதன் அடிப்படையில் நேற்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் நேற்று அனைத்து மதுபானக்கடைகளும் மூடப்பட்டன. எனவே மதுபிரியர்கள் நேற்று முன்தினமே அதிகளவில் மதுபாட்டில்களை வாங்கியுள்ளனர். இதனால் வழக்கத்தை விட சுமார் 5 கோடிக்கு மது விற்பனை நடத்துள்ளதாக டாஸ்மார்க் அதிகாரிகள் தெரிவித்தனர்.