Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 5 1/2 லட்ச ரூபாய்…. 1668 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

முகக்கவசம் அணியாவர்களிடமிருந்து ஒரே நாளில் காவல்துறையினர் 5 1/2 லட்ச ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர்.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முககவசம் அணிகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ஒரேநாளில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், 1668 பேர் முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு சென்றது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 5 1/2 லட்சம் ரூபாயை அபராதமாக வசூலித்தனர்.

Categories

Tech |