Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரே நாளில் 6,100 மாணவர்கள்…. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்…. சுகாதார இயக்குனர் அறிவிப்பு….!!

இன்னும் ஒரே வாரத்திற்குள் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதிலும் 15 வயது முதல் 18 வயதான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.  இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டு 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முதல் நாளான நேற்று சுமார் 6,100 மாணவ மாணவிகளுக்கு பள்ளியிலேயே வைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு வார காலத்திற்குள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |