எல் சால்வடார் நாட்டில் போதை பொருள் கடத்தல், பல கொலைகார கும்பல்கள் மிரட்டல் உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் படுகொலை சம்பவங்களும் அதிகரித்து காணப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டில் அதிபர் நயீப் புகெலெ நாட்டின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும், திட்டமிட்ட குற்ற செயல்களை ஒழிப்பேன் என்றும் உறுதியளித்திருந்தார். இருப்பினும் 2020-ல் கொரோனா காலகட்டத்தில் 50-க்கும் கூடுதலான மக்கள் 3 நாட்களில் கொல்லப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து 24/7 மணி நேர ஊரடங்கு உத்தரவு சிறையில் உள்ள கொலைகார கைதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டது.
70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கும்பலில் உள்ளனர் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் 62 பேர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 1992-ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் அதிக அளவிலான கொலைகள் நடந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தொலைபேசி அழைப்புகளை கண்காணித்தல், வாரண்ட் இன்றி கைது செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.