Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனாவின் எதிரொலி…. ஒரே நாளில் 685 பேருக்கு தொற்று… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 685 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 685 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 57 ஆயிரத்து 521 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து  மருத்துவமனையில் 5 ஆயிரத்து 415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |