பெண்கள் ஒவ்வொரு துறையிலும் பல சாதனைகளை புரிந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் பெண்கள் செய்யும் சாதனை நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது. கேரளாவை சேர்ந்த ரெஹ்னா ஷாஜகான் என்ற 25 வயதான இளம் பெண் ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்புகளை முடித்து சர்வதேச உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதை கேட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் கொரோனா சமயத்தில் ஒரே நாளில் சுமார் 55 ஆன்லைன் படிப்புகளை முடித்த ரெஹ்னா உலக சாதனைக்கும் முயற்சி செய்துள்ளார். இதையடுத்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் நிதி சார்ந்த ஆன்லைன் படிப்புகளை தேர்வு செய்து ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்புகளை முடித்து சான்றிதழ் பெற்று அசத்தியுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள இல்லிக்கலில் வசிக்கும் ரெஹ்னா லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் செயல்பாட்டு ஆராய்ச்சியில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு நல்ல வேலை கிடைத்தது. ஆனால் ஒரு சராசரி மாணவன் என்ற சொல்லை கடந்து சாதனை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “நான் தேர்வில் தேர்ச்சி பெற்ற போது நான் படிப்பில் சிறந்து விளங்க முடியும் என்பதை உணர்ந்தேன். நாம் கனவு காண்பதை விட முயற்சி செய்ய வேண்டும். சான்றிதழ் படிப்புகளை தொடர்வதன் மூலம் எனது திறமையை மேம்படுத்துவதில் நான் ஆர்வமாக இருந்தேன்” என்று கூறினார். இதற்கு முன்னதாக ஒரே நாளில் 75 சான்றிதழ் படிப்புகளையும் முடித்து உலக சாதனை படைத்தவர்களை முறியடித்து ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்புகளை முடித்து உலக சாதனை படைத்துள்ளார்