Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஒரே நாள்ல இவ்வளவா..! எங்கடா வச்சிருந்திங்க…. வாகன சோதனையில் பிடிபட்ட லட்சங்கள்…. காஞ்சியில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 4,20,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம்6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்துள்ளார்கள். இதனால் ஆங்காங்கே பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பியில் பறக்கும் படை அலுவலரான கலைச்செல்வி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில் ஓட்டுனர் உரிய ஆவணங்களின்றி 31/2 லட்ச ரூபாயை எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளார்கள். மேலும் மற்றொரு காரில் டிரைவர் உரிய ஆவணங்களின்றி 70,000 ரூபாயை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பறக்கும் படையினர் 70,000 ரூபாயையும் பறிமுதல் செய்து மொத்தமாக 4,20,000 ரூபாயை வருவாய்த்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |