மதுரையில் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் மூலம் 75 வழக்கிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருக்கும் உரிமை மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணி ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கினை நீதிபதி சிந்துமதி, ராம் கணேஷ் ஆகியோர் விசாரணை செய்துள்ளனர்.
இதனையடுத்து இதில் உரிமையியல் 6 வழக்குகள் குடும்ப பிரச்சனை, வாடகை பிரச்சனை மற்றும் கொடுக்கல்-வாங்கல் இருந்தது. இதற்கு நீதிபதிகள் தீர்ப்பு கொடுத்துள்ளனர். மேலும் குற்றவியலில் 69 வழக்குகள் நஷ்ட ஈடு, வாகன மோட்டார் விபத்து போன்றவை இருந்தது. இவற்றிற்கும் உடனடியாக தீர்வுகள் காணப்பட்டது. மேலும் சில பேர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.