தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி மறைந்து இரண்டு ஆண்டு நினைவு நாள் திமுக தொண்டர்களால் அனுசரிக்கப்படுகின்றது. இதனை அடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீங்கள் இட்ட கட்டளையை உங்கள் பாதையில் தொடருகின்றோம் தலைவரே. நீங்கள் தான் சொன்னீர்கள் அமைப்பு ரீதியாக கழகம் ஆடை அணிந்துள்ள உடலைப் போல. அதில் உயிரை போன்றதொரு கொள்கை. பதவி என்பது அணிகலன். அணிகலன் இன்றி வாழ முடியும், கொள்கை இல்லை என்றால், உயிர் இல்லை. ஆடை இல்லையேல் மானம் போகும்.
இன்றையதினம் ஆட்சிப் பதவி என்ற அணிகலன் இல்லாமல் இருக்கலாம். கொள்கையும், அமைப்பும் வலுவாக இருக்கிறது தலைவரே. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஏராளமான வெற்றி பெற்றுள்ளோம். சட்டமன்றத்திலும், நாடாளுமன்ற மக்களவையில், மாநிலங்களவையிலும் கழகத்தின் வலிமை உயர்ந்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக கழ்கம் அமர்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றி இருக்கிறார்கள். டெல்லி நாடாளுமன்றம் முதல் குக்கிராம ஊராட்சி வரைக்கும் கழகத்தவர் செல்வாக்கு உயர்ந்து வருகிறது தலைவர் அவர்களே..
இனத்துக்கு ஒரு இடைஞ்சல் என்றால் முதல் குரல் நம் குரல் தான். மொழிக்கு ஒரு தடங்கல் என்றால் முதல் குரல் நம் குரல் தான். தலைவர் அவர்களே நீங்கள் சொல்வீர்கள் எப்போதும் கொள்கை எதிர் நோக்கி பாயும் முதல் தோட்டா திமுக தோட்டாவாக தான் இருக்க வேண்டும் என்று…. நாங்களும் அப்படித்தான் செயல்படுகின்றோம் தலைவர் அவர்களே… கழகத்தை வீழ்த்த வீன் அவதூறுகளையும், பொய் புகார்களையும், புனை கதைகளையும் பரப்பி வருகிறார்கள். நாங்கள் தீயை தாண்டிக் கொண்டிருக்கிறோம் நாட்டுக்காக…
நேற்றைய பெருமூச்சை, இன்று போக்கி நாளை பற்றிய நம்பிக்கையை யார் நமக்கு அழைக்கிறாரோ… அவர்தான் தலைவர் என்பீர்கள் தலைவர் அவர்களே… நேற்றைய பெருமூச்சை இன்று போக்கும் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். நாளைய பற்றிய நம்பிக்கையளிக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். ஆறாவது முறையாக கழகத்தை அரியணையை ஏற்ற உங்கள் நினைவு நாளில் சூளுரை ஏற்போம் தலைவரே.
தமிழ் மக்களுக்கெதிரான மாநில அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கு எதிரான மத்திய அரசுக்கு எதிராகவும், என ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளும் சளைக்காமல் மோதிக் கொண்டு இருக்கின்றோம்… வெல்வோம் தலைவரே… அடுத்த நினைவு நாளில் சொல்வோம் தலைவரே…. உத்தமத் தொண்டர்களின் இரத்தமே கழகம் என்றுபீர்கள்… அந்த உத்தம தொண்டர்களின் சார்பில் வணங்குகிறேன் தலைவர்… ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பீர்கள். உங்களைப்போல உழைக்க முயற்சிக்கும் இந்த எளியவன் ஸ்டாலினின் வணக்கம் தலைவரே…
#எங்கெங்கும்கலைஞர் #KalaignarEverywhere https://t.co/O9YOTSdG4k
— M.K.Stalin (@mkstalin) August 7, 2020