Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில்… இரண்டு கைகளிலும் வெவ்வேறு மொழிகளில்… எழுதி அசத்திய சிறுமி… குவியும் பாராட்டு..!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதி பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை  சேர்ந்த பன்மொழி மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருபவர் தேஜஷ்வி தயகி. இவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதும் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் கண்ணாடியில் எழுதும் திறமைகளையும், தலைகீழாக எழுதுவதையும் கற்றுக் கொண்டுள்ளார். வலது கையால் ஆங்கிலமும், இடது கையால் இந்தியும் எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர்.

இது தவிர இவருக்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தலைகீழாக எழுத பயிற்றுவித்து வருகிறார். தேஜஸ்வி முதலில் தனது இடது கையால் தான் எழுத தொடங்கினாராம். இருப்பினும் அவர் தந்தை அவரை வலது கையால் எழுதும்படி வற்புறுத்தியுள்ளார். இதை எடுத்து மெதுவாக இரு கைகளிலும் தலைகீழாக எழுதத் தொடங்கினார். விரைவில் ஒரு கையால் இந்தியிலும், மறுபுறம் ஆங்கிலத்தில் எழுதுவதை பயிற்றுவித்து கொண்டார்.

பரீட்சையின் போது இருகைகளால் எழுதுவதால் நிர்ணயித்த நேரத்திற்கு முன்பாகவே எனது தேர்வை  முடித்து விடுவேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இவரின் தந்தை ஒரு விவசாயி. அதே நேரத்தில் அவரது தாயார் பிசியோதெரபி கிளினிக் நடத்தி வருகிறார்.

Categories

Tech |