பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் பல மாற்றங்களை அரசு செயல்பட தொடங்கியுள்ளது. உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை மற்றும் பாட திட்டம் போன்றவற்றில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் பொறியியல் படிப்பு இயங்கி வருகின்றது. இந்நிலையில் ஏஐசிடிஇ, பிடெக் மாணவர்கள் ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
பி டெக் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்கலாம் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள் பிடெக் மாணவர்களை லேட்ரல் என்ட்ரி அடிப்படையில் தகுதியான பொறியியல் பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம்.இதற்காக மாணவர்கள் அதே குறிப்பிட்ட பாடப்பிரிவை முன்னதாக எடுத்து படிக்க வேண்டியதில்லை. இது தொடர்பாக உரிய மாற்றங்களை கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.