மான் மற்றும் முயலை ஒரே நேரத்தில் விழுங்கிய மலைப்பாம்பு அது இருந்த இடத்தைவிட்டு நகர முடியாமல் நெளிந்து கொண்டிருந்தது. திருப்பதி அருகே தலக்கோணா பகுதியில் பல விலங்குகள் உள்ளன. சிறுத்தை, மான், முயல், கரடி என்று ஏராளமான வனவிலங்குகள் அங்கு உள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கு பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோயில் உள்ளது. மலைப்பகுதியில் உள்ள ஈஸ்வரனை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் வாகனங்கள் மூலமாகவும் நடந்தும் செல்வதுண்டு.
இந்நிலையில் நேற்று பக்தர்கள் ஈஸ்வரன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று முயல் மற்றும் மானை விழுங்கிவிட்டு இடத்தை விட்டு நகர முடியாமல் நெளிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து சில மணி நேரத்திற்கு அங்கேயே நெளிந்து கொண்டிருந்த மலைப்பாம்பு பின்னர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது.