Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் மிரட்டப் போகும் 2 புயல்…. இனிமேதான் மழையின் ஆட்டம் ஆரம்பம்…. இந்திய வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடலில் இரண்டு புயல் சுழற்சிகள் இருப்பதாக இந்திய மாநில ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அரபிக்கடலில் தென்கிழக்கிலும் வங்க கடலில் கிழக்கு மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் சுழற்சி உள்ளது. இதனால் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |