ஒரே நேரத்தில் நான்கு தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர் . சமீபத்தில் வெளியான படங்களின் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலில் பிரபல தயாரிப்பாளரான அன்பு செழியன் வீட்டில் இன்று காலை 5 மணி அளவில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், அடுத்தடுத்து கலைப்புலி எஸ் தானு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அதன் பிறகு ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ் பிரபுவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றன. மேலும் லக்ஷ்மணன், மன்னார், சத்யஜோதி தியாகராஜன், சீனு உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நேரத்தில் நான்கு பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.