தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 50 வயதான கோடீஸ்வரர் ஒருவர் ஒரே நேரத்தில் 6 பெண்களை திருமணம் செய்துகொண்ட நிலையில் மேலும் 8 பேரை மணக்க உள்ளதாக கூறி அதிர வைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கோபெலா ம்தெம்பு (Mthembu) என்பவர் சில தினங்களுக்கு முன்னர் ஒரே நேரத்தில் 6 இளம்பெண்களை மணந்துள்ளார்.
50 வயதான Mthembu 14 மனைவிகளை திருமணம் செய்ய முடிவு செய்ததுள்ளார். இதை தொடர்ந்து இந்த ஆண்டு 8 மனைவிகளைத் இலக்காக கொண்டு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில் தற்போது 6 பேரை திருமணம் செய்யதுள்ளார். இதில் 2 பேர் திருமணத்திற்கு தயாராக இல்லாததால் 6 பேரை மட்டும் மணந்ததாக கூறினார்.
இந்த ஜூன் மாதம் 2 பேரும் அடுத்த ஆண்டு மேலும் 6 பெண்களை மணக்க திட்டமிட்டுள்ள்தாக தெரிவித்தார்.
விழாவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பில் 3,322,067 செலவு செய்துள்ளார் திருமண ஏற்பாடுகள் திருப்தி இருந்ததாக அவர் கூறினார் ஆனால் என் மனைவியை எந்த சூழ்நிலையிலும் ஏமாற்ற மாட்டேன் என கூறியுள்ளார்