Categories
உலக செய்திகள்

“ஒரே நேர்கோட்டில் 7 கோள்கள்”…. இன்னும் சில நிமிடங்களில் வானில் நிகழும் அற்புதம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பிரபஞ்சத்தில் ஒரு அதிசய நிகழ்வு இன்று இரவு 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. அதாவது நம் சூரிய குடும்பத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கோள்களும் இன்று இரவு 9 மணிக்கு ஒரே நேர்கோட்டில் வானத்தில் தெரியும். இதில் பூமி தவிர சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களையும் வானத்தில் பார்க்கலாம். இந்நிலையில் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கோள்களை டெலஸ்கோப் அல்லது பைனாகுலர் போன்றவைகள் கொண்டு தான் பார்க்க முடியும்.

ஆனால் புதன், வெள்ளி, செவ்வாய், சனி போன்ற 5 கோள்களை வெறும் கண்ணால் பார்க்கலாம். இதில் வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய 5 கோள்களின் புகைப்படத்தையும் தன் வீட்டின் மொட்டை மாடியில் வைத்து புகைப்படம் எடுத்து வானியலாளர் டாக்டர் ஜியான்லுகா மாசி என்பவர் தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் நேற்று நடந்தது போலவே இன்றும் வானில் அனைத்து கோள்களும் ஒரே நேர்கோட்டில்‌ இன்று இரவு 9 மணி அளவில் வர இருக்கிறது.

Categories

Tech |