Categories
சினிமா

ஒரே படத்தில் அடித்தது ஜாக்பாட்…. பிரபல காமெடி நடிகரின் மகளுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் கொட்டாச்சி.இவர் பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். தற்போது இவரின் மகளான மானஸ்வியும் சினிமாவில் நுழைந்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் மானஸ்வி. இவருக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.அண்மையில் டெல்லி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட மாமனிதன் படத்தில் மானஸ்வியின் நடிப்பை பார்த்து உடனே பாலிவுட் வாய்ப்பு கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

Categories

Tech |