தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது உதயநிதி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் வைகை புயல் வடிவேலு மூலம் முதல்முறை உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. படப்பிடிப்பு முடிந்தது அடுத்து அமைச்சரவையில் அடி எடுத்து வைக்க வேண்டியதானே என இளைஞர் அணையினர் உற்சாகமாக குரல் கொடுத்து வருகின்றனர். உதயநிதியை அமைச்சராக வேண்டும் என சில மாதங்களுக்கு முன்னரே ஒவ்வொரு அமைச்சராக செய்தியாளர்களை சந்தித்து பேசி வந்த நிலையில் படப்பிடிப்பு பணிகள் முடியட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக அப்போதே தகவல்கள் வெளியாகிறது.
அதுமட்டுமில்லாமல் உதயநிதிக்கு எந்த துறை வழங்கப்படும் என்று விவாதங்களும் எழுந்தது. இளைஞர்களை மாணவர்களை தன் பக்கம் இழுப்பதற்கு வசதியாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்படலாம் என்று கூறுகின்றனர். உதயநிதி அமைச்சரவை என்ரியை விட மாமன்னன் ரிலிஸை எதிர்ப்பார்க்கிறாராம். ஸ்டாலினும் அவ்வப்போது அதன் அப்டேட்களை கேட்டு பெற்றுக் கொண்டதாக சொல்கிறார். மாமன்னன் மீது எத்தனை எதிர்பார்ப்பு என்று கேட்டால் அதன் பின்னுள்ள அரசியல் கணக்குகளை விவர்கின்றனர். ஆரம்பத்தில் லைட் வெயிட்டான காமெடி படங்களில் கதாநாயகன் நடித்து வந்த உதயநிதி தற்போது தனது பணியை முழுவதுமாக மாற்றி நெஞ்சுக்கு நீதி போன்ற கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். தென் மாவட்டங்களில் நடைபெறும் சாதி கொடுமைகளை பின்னணியாக கொண்டு பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற திரைப்படங்கள் இயக்கி மாஸ் ஹிட் கொடுத்த மாரி செல்வராஜ் மான்னன் திரைப்படத்தை இயக்க்கியுள்ளார். இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் முந்தைய திரைப்படங்களை போலவே அதே பின்னணியில் உருவாகிர்வதாகவும் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து தென் தமிழகத்தை சேர்ந்த தேவேந்திர குல வேளாளர்கள் வாக்குகளை பெறுவதில் திமுக தொடர்ந்து சறுக்கி வருகிறது. வட மாவட்டங்களில் பறையர் சமூக வாகுகள் திமுகவின் வெற்றிக்கு காரணம் என்றால் திமுகவின் தோல்விக்கு தென் மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் வாக்குகள் எதிராக திரும்புவது மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே தேவேந்திர குல வேளாளர் சமூகத்தவர்களை தன் பக்கம் நிற்பதற்காக தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு அஞ்சலி செலுத்த உதயநிதியை முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். இந்த சமூக வாக்குகளை கவர பாஜக கடும் முனைப்பு காட்டி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த திமுக எடுத்துள்ள முயற்சியாகவே உதயநிதி பரமக்குடி வருகை என கூறுகிறார்கள். பரியேறும் பெருமாள், கர்ணன் இரு திரைப்படங்களும் தேவேந்திரகுல வேளாளர் சமூகப் பின்னணியில் உருவாகி இருந்தது. அதனைப் போல மாமன்னன் திரைப்படமும் அமையும் பட்சத்தில் உதயநிதி அந்த சமூகத்தவர்கள் மத்தியில் நெருக்கமாக கொண்டு செல்லலாம் என்று கணக்கு போடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதற்கு பலன் கிடைக்கிறதா என்பதை படம் வெளியாகும் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.