Categories
தேசிய செய்திகள்

ஒரே பஸ்ஸில் பணிபுரியும் தம்பதியினர்…. இதோ இவர்களின் காதல் பயணம் கதை…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த காதல் தம்பதியினர் கிரி மற்றும் தாரா. இதனிடையில் அரசு போக்குவரத்து பேருந்து ஒன்றில் கிரி டிரைவராகவும், தாரா கண்டக்டராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில் மற்ற பேருந்துகளை போன்று இது சாதாரணமானது கிடையாது. இந்த பேருந்தில் பயணிகள் பாதுகாப்புக்காக 6 சி.சி.டி.வி. கேமராக்கள், அவசரகால சுவிட்சுகள், இனிமையான பயணத்திற்கு பாடல்கள் கேட்கும் வசதி, குழந்தைகளை கவர பொம்மைகள் மற்றும் உள் அலங்காரம் போன்றவை இடம்பெற்றுள்ளது. மேலும் பயணிகள் சென்றுசேரும் இடம் குறித்த விவரம் அறிவிக்கும் எல்.இ.டி. போர்டு வசதியும் பேருந்தில் இருக்கிறது.

அத்துடன் பேருந்து அழகாக தோற்றம்அளிக்க இந்த தம்பதி தங்களது சொந்த நிதியையே செலவிட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு ரசிக பெருமக்களும் இருக்கின்றனர். இப்பேருந்தில் வழக்கமாக பயணிப்பவர்கள் தங்களுக்குள் பல வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோ வெளிவந்து 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டுகளித்திருக்கின்றனர். இதுகுறித்து தாரா புன்னகையுடன் கூறியதாவது, தினசரி நாங்கள் அதிகாலை 1:15 மணிக்கு எழுந்திருக்கிறோம். பின் 2 மணிக்கு பேருந்து டெப்போவிற்கு சென்றடைவோம்.

அதனை தொடர்ந்து பேருந்தில் கிரி தூய்மை பணியை மேற்கொள்வார். அதன்பின் எங்களுடைய பணி காலை 5:50 மணிக்கு துவங்கும்” என கூறினார்.  அணையில் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினரின் காதல் 20 வருடங்கள் பழமையானது. கிரிக்கு 26 வயது இருக்கும் போது, தாராவுக்கு வயது 24. இருவரும் சந்தித்த பிறகு காதல் வசப்பட்டுள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டிலும் பெரிய எதிர்ப்புகள் எதுவுமில்லை. அதன்பின் இருவரும் திருமணம் செய்யலாம் என முடிவானபோது, ஜாதகம் ஒத்து போகவில்லை. பின் காத்திருந்து கொரோனா ஊரடங்கின்போது 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

Categories

Tech |