Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு கன்றுகுட்டிகள்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு கன்று குட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் விஸ்வகர்மா நகரில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பசு மாடு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது. தற்போது பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக இருக்கின்றன. இதுகுறித்து அறிந்ததும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பசுவையும், கன்றுகளையும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Categories

Tech |