ஒரே பிரிமியம் செலுத்தினால் போதும் வாழ்நாள் முழுவதும் நமக்கு பென்ஷன் தரும் சிறந்த திட்டத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
நீங்கள் தற்போது ஓடி ஓடி வேலை பார்க்கிறீர்கள். ஆனால் உங்களது ஓய்வு காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு தொகை தேவைப்படும். இதற்கு நீங்கள் சேமித்து வைக்கவேண்டும். உங்களது குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்காமல் இறுதிக் காலத்தில் உங்களை பார்த்துக்கொள்ள பென்சின் மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. எல்ஐசி நிறுவனம் செயல்படுத்தி வரும் பென்சன் திட்டங்களிலேயே மிகவும் சிறப்பான ஒரு திட்டம்தான் ஜீவன் சாந்தி திட்டமாகும். இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், நீங்கள் ஒரே ஒரு பிரீமியம் செலுத்தினால் போதும்.
வாழ்நாள் முழுவதும் 10 ஆயிரம் ரூபாய் வரை பென்ஷன் வாங்க முடியும். நீங்கள் 5, 10, 15, 20 ஆண்டுகளில் விருப்பத்திற்கு ஏற்ப பென்ஷன் வாங்கிக்கொள்ள முடியும். பென்ஷன் வாங்க தொடங்கிய அடுத்த ஒரு வாரத்தில் கடன் பெறும் வசதியும் இதில் உள்ளது. அதேபோல பென்சன் வாங்க தொடங்கிய பிறகு மூன்று மாதங்களில் பாலிசியை சரண்டர் செய்யவும் முடியும். இந்த பாலிசிக்கு குறைந்தபட்சம் 30 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதே போல அதிகபட்சம் 75 வயது. 37 வயது நிரம்பிய ஒருவர் இந்த பாலிசியை வாங்குவதாக இருந்தால் அவர் ஒரே பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் அவருக்கு உடனடியாக பென்சன் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாதத்துக்கும் 10,067 என்ற அளவில் பென்சன் வாங்குவார். ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வாங்காமல், மூன்று மாதம் ஒரு முறையோ, ஆறு மாதம் ஒரு முறையோ அழகு ஒரு வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் பென்சன் வாங்கிக்கொள்ள முடியும். இதுமட்டுமில்லாமல் அவர் இறந்த பிறகு இந்த பாலிசி முடிந்துவிடும். மேலும் ஒரே பிரீமியம் தொகை செலுத்தி மாதத்துக்கு 14 ரூபாய் பென்ஷன் வாங்கும் மற்றொரு திட்டமும் இதில் உள்ளது. இதன் மூலம் உங்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவிக்கின்றது.