பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பாக குறித்து கொரோனா பரவல் குறித்த முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகை சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து ஜி7 மாநாட்டில் உரையாடல் நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியா சார்பாக மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவை ஒழிக்க உலகளாவிய ஒத்துழைப்புடன் போராடவேண்டும். அரசுகளின் அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். சுகாதாரத் துறையில் “ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்” என்ற நிலையை எட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.