கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பைக்கில் அதிவேகமாக சென்ற 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் பலி.
16 வயதே ஆன பென்ஸ், ஸ்டெபின், முல்லப்பன் என்ற மாணவர்கள் தலைக்கவசம் கூட அணியாமல் மிக வேகமாக பைக்கை ஓட்டி சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியது.
அந்த விபத்தில் பரிதாபமாக 3 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையம் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.