செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமி நகை கடன்களை கொடுக்கவில்லை என்று சொல்கிறார், நாங்கள் கேட்கிறோம் நீங்கள் உங்கள் ஆட்சி காலத்தில் பொறுப்பில் இருந்தபோது யாருக்கெல்லாம் நகை கடன் கொடுத்தீர்கள் ? என்று கணக்கெடுத்து பார்த்தால் திருவண்ணமலையில் ஒரே ஒருவர் மட்டும் 62 பேரில் பெயரில் 1 1/2 கோடி ரூபாய்க்கும் மேல் 5 பவுன் அளவில் வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள்.
இந்த மோசடிகளுக்கு, ஊழல்களுக்கு யார் துணை போய் இருக்கிறார்கள், யாருடைய ஆட்சியில் இதெல்லாம் நடந்திருக்கிறது ? எனவே அவற்றை எல்லாம் எடுத்து சரிபார்த்து, யாரெல்லாம் தவறு செய்திருக்கின்றார்களோ, யாரெல்லாம் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கின்றார்களோ, யாருக்கெல்லாம் தவறாக இந்த நகை கடன் வழங்கப்பட்டு இருக்கிறதோ அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு உண்மையான, தகுதியான சரியான நபர்களுக்கு அதை வழங்க வேண்டும் என்று மாண்புமிகு கூட்டுறவு அமைச்சர் அவர்களும் இதை தெளிவாக தெரிவித்து இருக்கிறார்.
எனவே மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் கூறிய அனைத்தும் பொய்யுரைகளின் கட்டுரையாக அமைந்துள்ளது, புறம்தள்ளப்பட வேண்டியவையாக இருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சருடைய நல்லாட்சியை குறித்து நாடும், ஏடும் பாராட்டுகிறது. நாட்டு மக்கள் இன்றைக்கு பாராட்டுகிறார்கள். எனவே எடப்பாடி சொல்வதில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை வரப்போவது இல்லை, நாட்டுமக்கள் இதனை எண்ணி நகையாடுகிறார்கள், ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கி புறம்தள்ளுவார்கள் என்று தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.