மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 1500 ஏக்கர் பரப்பளவில், 750 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதையடுத்து பிரதமர் அலுவலகம் இந்த திட்டம் தான் ஆசியாவிலேயே பெரிய திட்டம் என்று ட்விட்டரில் வெளியிட்டது. இதற்க்கு பதிலளிக்கும் வகையில், கர்நாடக மாநிலத்தில் 2000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பவகடா சூரிய மின் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டு விட்டது.
ஆசியாவிலேயே பெரிய சூரிய மின் திட்டம் ரோவா சூரிய மின் திட்டமா ? அல்லது பவகடா சூரிய மின் திட்டமா என்பதற்கு மத்திய மின்சார துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி. கே சிவகுமார் டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். இதையடுத்து ராகுல் காந்தியும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை இணைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை ‘அசத்யாகிரகி‘ ( பொய் சொல்வதை வழக்கமாக வைத்திருப்பவர்) என்று குறிப்பிட்டு உள்ளார்.
असत्याग्रही! https://t.co/KL4aB5t149
— Rahul Gandhi (@RahulGandhi) July 11, 2020