தூத்துக்குடியில் அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினி விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து சீமான் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகளின் ஊடுருவியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் ரஜினியின் தெரிவித்த கருத்து குறித்து விசாரிப்பதற்காக நாளை மறுநாள் பிப்ரவரி 25ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது .
ஆனால் ரஜினி தரப்பில் நேரில் ஆஜரானால் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து , சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் , மேலும் அரசியல் சூழ்நிலை காரணமாக தன்னால் பிப்ரவரி 25 ஆம் தேதி நேரில் ஆஜராக முடியாது என்று விலக்கு கூறியதோடு கடிதம் மூலம் எழுத்து பூர்வமாக பதிலளிக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து நடிகர் ரஜினிக்கு எதிரான #தொடைநடுங்கி_ரஜினி என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகியது. இதில் ரஜினிக்கு எதிரான கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினி ரசிகர்களுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியுள்ளார்.
Meme of the Day…🤣😂🤣👇👇👇 pic.twitter.com/ymo7FdlL3y
— DEW (@dewTwt) February 22, 2020
சீமான் நேற்று பதிவிட்ட ட்வீட்_டில் ‘போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள்’ என்று சொல்ல தூத்துக்குடி சென்றபோது கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்போது மட்டும் கெட்டுவிடுகிறதா? ரசிகர்கள் கூடி சட்டம் ஒழுங்கு சீர்குலையுமென்றால், உங்கள் ரசிகர்கள் யார்? இது எப்டி இருக்கு?! என்று பதிவிட்டுள்ளார்.
ரஜினி சட்டம் ஒழுங்கு கேட்டு விட்டது , சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள் என்று தெரிவித்த கருத்தை அவருக்கே உரிய ஸ்டைலில் சீமான் ரஜினிக்கே கொடுத்துள்ளார். ரஜினி தூத்துக்குடி வந்தால் ரசிகர்களை கூட்டம் அதிகமாகி சட்டம் ஒழுங்கு கேட்டு விடுமென்றால் உங்கள் ரசிகர்கள் சமூக விரோதிகளா ? என்று சீமான் வினவி உள்ளார்.
'போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள்' என்று சொல்ல தூத்துக்குடி சென்றபோது கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்போது மட்டும் கெட்டுவிடுகிறதா?
ரசிகர்கள் கூடி சட்டம் ஒழுங்கு சீர்குலையுமென்றால், உங்கள் ரசிகர்கள் யார்?
இது எப்டி இருக்கு?!
— சீமான் (@SeemanOfficial) February 22, 2020