மகன் இறந்ததுக்கத்தில் தம்பதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் கணுவாய் ரோடு பகுதியில் சஞ்சீவ் சங்கர்(46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி(55) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரவி கிருஷ்ணா(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் காரில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக போரூர் அருகே இருக்கும் ரெசார்ட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கி ரவி கிருஷ்ணா உள்பட 3 பேர் இறந்தனர்.
இந்நிலையில் மகன் இறந்த துக்கத்தில் இருந்த தம்பதி நேற்று வீட்டிலிருந்து பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.