Categories
உலக செய்திகள்

ஒரே மருத்துவமனை….. “14 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்”….. செம வைரலாகும் விநோத சம்பவம்….!!!!

ஒரே நேரத்தில் 14 செவிலியர்கள் கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறந்ததை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதைவிட ஒரே பிரசவத்துக்கு ஒரு டஜன் செவிலியர்கள் பிரசவம் பார்த்தது கூட கேள்வி பட்டிருப்போம். ஆனால் ஒரு மருத்துவமனையில் செவிலியர்கள் ஒரே நேரத்தில் பிள்ளை போவதை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதுவரை இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் அமெரிக்காவில் உள்ள மிசௌரியில் உள்ள கென்சஸ் மாகாணத்தின் neonatal intensive care unit at Saint Luke’s Hospital என்ற ஹாஸ்பிடலில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தற்போது இந்த மருத்துவமனையில் செவிலியராக சேர்ந்தாலே நீங்கள் கருவுறலாம்  என்ற அளவிற்கு இதனை எல்லோரும் பேசி வருகின்றனர். காரணம் சமீபத்தில் தான் இந்த மருத்துவமனையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒரே நேரத்தில் கருவுற்று இருக்கின்றனர். இந்த செய்தியை அறிந்த இணைய உலகமே வாயைப் பிளந்து கொண்டிருக்கிறது.  கிட்டத்தட்ட அந்த மருத்துவமனையின் 14 செவிலியர்கள் குழந்தையை பெற உள்ளனர். இதுகுறித்து குட்மார்னிங் அமெரிக்கா பத்திரிகைக்கு ஒரு செவிலியர் கொடுத்த பேட்டியில் தான் கருவுற்றிருப்பதை தன் குடும்பத்திற்கு சொல்வதற்கு முன்பு சக ஊழியர்களிடம் தான் பகிர்ந்து கொண்டேன்.

இதுபற்றி பேசும் போது முதலில் சிலர்தான் ஆரம்பித்தார்கள். பின்னர் நிறைய பேர் தாங்கள் கருவுற்று இருப்பதாக சொல்ல துவங்கினார்கள். ஒரு சிலர் மிக சமீபத்தில்தான் குழந்தைகளை பெற்றெடுத்து இருக்கிறார்கள். அவர்கள் பேசும்போது இந்த பிராஸ்ஸில் நம்மோடு நம் சக பணியாளர்கள் எவ்வளவு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற உணர்வு அருமையாக இருந்ததாக கூறினார். மேலும் அந்த மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ITS A BABY BOOM என்று பதிவிட்டுள்ளனர். இப்படி ஒரே சமயத்தில் இத்தனை செவிலியர்கள்  கருவுற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |