ஒரு மாதத்தில் உங்கள் உடல் எடையை குறைக்க தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த டீயை மட்டும் குடித்து வாருங்கள்.
தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை உடல் எடை அதிகமாக இருப்பது தான். அதனால் அவர்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். உடல் எடை காரணமாக அவர்களின் உடல் அழகும் கெட்டுப் போகிறது. அதனால் உடல் எடையை குறைப்பதற்கு நடைப்பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகளை அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதனை தவிர இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்கு சில பானங்கள் உதவுகின்றன. அதில் முக்கியமான ஒன்று தான் இது.
தேவையான பொருட்கள்:
கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
புதினா- ஒரு கைப்பிடி அளவு.
இஞ்சி- 1 இன்ச் அளவு
தேன்: 2 ஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் சூடேறியதும் அதில் கருஞ்சீரகம் போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். அப்படி கொதிக்கும் நேரத்தில் இஞ்சியைத் தோல் சீவி நன்கு நசுக்கி அதில் போட வேண்டும். அதன்பிறகு அடுப்புத் தீயை சற்று குறைத்து விட்டு, அதில் புதினா இலைகளையும் கொஞ்சம் நசுக்கி அல்லது கசக்கி போடவேண்டும். புதினா போட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பை நிறுத்தி விட வேண்டும். அதனை வடிகட்டி பிறகு ஒரு டம்ளர் டீக்கு அரை எலுமிச்சையை பிழிந்து விட்டு, அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.
அதனைப் போலவே மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். காலையிலேயே மொத்தமாக போட்டு வைத்துக்கொண்டு குடிக்கிற நேரத்தில் மட்டும் எலுமிச்சை மற்றும் தேன் சேர்க்க வேண்டும். குறிப்பாக இதனை சூடாக மட்டும் தான் குடிக்க வேண்டும். ஏற்கனவே போட்டு வைத்த டீயாக இருந்தால் சூடுபடுத்தி குடிக்க வேண்டும்.இந்த எடை குறைக்கும் பானத்தை குடிக்கும் காலங்களில் டீ மற்றும் காபி எக்காரணத்தைக் கொண்டும் குடிக்கக்கூடாது.