25-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பெண் போலீசார் ஒரே மாதிரி உடை அணிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 1997-ஆம் ஆண்டு பெண்கள் போலீஸ் பணியில் சேர்ந்துள்ளனர். அந்த கால கட்டத்தில் பணியில் சேர்ந்த பெண் போலீசார் கோயம்புத்தூர் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பெண்கள் “சங்கமம் கோவை நண்பர்கள்” என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப்பை தொடங்கி அதில் தங்களது கருத்துகளை பரிமாறி கொண்டனர். தற்போது இந்த பெண்கள் பணியில் சேர்ந்து 24 ஆண்டுகள் நிறைவடைந்து 25-வது ஆண்டு தொடங்கியுள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக ஆனைகட்டி பகுதியில் இருக்கும் தனியார் சொகுசு விடுதியில் 78 பெண் போலீசார் ஒன்று கூடி ஒரே மாதிரியாக சேலை அணிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர். இதனையடுத்து கேக் வெட்டியும், உற்சாகமாக நடனமாடியும், குழு புகைப்படம் எடுத்தும் பெண் போலீசார் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் பணியில் சேர்ந்த 78 பெண் போலீசாரும் சப்-இன்ஸ்பெக்டராக விரைவில் பதவி உயர்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.