Categories
தேசிய செய்திகள்

ஒரே மாமரத்தில் 121 வகை மாம்பழம்…. என்ன ஒரு அதிசயம்?…..!!!!!

உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள மரம் ஒன்றில் 121 வகையான மாம்பழங்கள் வளர்கிறது.  சஹரன்பூர் மாவட்டம் ஏற்கனவே மாம்பழ விளைச்சலுக்கு பெயர்பெற்ற மாவட்டமாகும்.  மாம்பழக உற்பத்தியில் புதுமையை புகுத்த அங்குள்ள தோட்டக்கலை அதிகாரிகள் திட்டமிட்டனர்.  அதன்படி, அவர்களின் முயற்சியில் நிகழ்ந்த அதிசயமே இந்த மாமரம். 15 வயதான இந்த மாரத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 121 வகை மாம்பழ மரத்தின் கிளைகளை தோட்டக்கலை அதிகாரிகள் நட்டுள்ளனர்.  இந்த முயற்சி பலன் அளிக்க தொடங்கியதையடுத்து ஒரே மாரத்தில் 121 வகையான மாம்பழங்கள் வளர்ந்து வருகிறது.

இந்த மரத்தின் வயது 10 ஆக இருக்கும்போதே அதனை தேர்வு செய்ததாக கூறும் சஹரன்பூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் பயிற்சி மைய இணை இயக்குநர் ராம்,  இந்த மரத்தை கவனித்துக் கொள்ள தனி ஊழியர் நியமிக்கப்பட்டதாகவும், தற்போது மரத்தின் ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு வகை மாம்பழம் வளருவதாக கூறுகிறார். இந்தியாவின் மாம்பழ மனிதர் என்று அழைக்கப்படும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த  ஹாஜி கலிமுல்லா கான் ஒரே மரத்தில்300 வகையான மாம்பழங்களை வளர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டு அவருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

Categories

Tech |