கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் 250 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்த விழாவில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவர் கர்ப்பிணி பெண்களுக்கு 1,000 ரூபாய் மதிப்பிலான மதிப்பிலான சீர்வரிசை பொருள்களை வழங்கினார். இந்த விழாவில் சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் சின்னசேலம், பேரூராட்சி தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி அகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.