Categories
மாநில செய்திகள்

ஒரே ரேஷன்கடையில் இனி 3 ஆண்டுகளுக்கு மேல்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்தமிழ்நாட்டில் பணியாளர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது” என கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியாயவிலைக்கடைகளில் பணியாளர்களை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது. வெளி நபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியாட்களை அனுமதிக்க துணைபோகும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |