கடந்த 13 ஆண்டுகளுக்கு பின்பு இளையராஜா தனது தம்பியை அழைத்து பேசியது தொடர்பாக இயக்குனர் தங்கர் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் இசையமைப்பாளரான இளையராஜா தனது தம்பியான கங்கை அமரனிடம் கடந்த 13 ஆண்டுகளாக பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் இளைய ராஜாவாகவே தனது தம்பியான கங்கைஅமரனை அழைத்து பேசியுள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இவ்வாறு இருக்க 13 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனே தன்னை அழைத்து பேசியதால் இனி அவர் சொல்வது தான் எல்லாமே என்று கங்கை அமரன் மகிழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இளையராஜா தனது தம்பியை அழைத்து பேசியது தொடர்பாக இயக்குனர் தங்கர்பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஒரே வயிற்றில் பிறந்து, ஒன்றாக வளர்ந்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, காலம் ஏற்படுத்திய பிரிவில் கடந்த காலங்களை எண்ணி எண்ணி ஏக்கத்தோடு தனிமையில் தத்தளித்து ஒன்று சேர்ந்த பின் அங்கே சொற்களுக்கு இடமேது என்று பதிவிட்டுள்ளார்.