நாடு முழுவதும் கூ செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கூ செயலி, ஏறக்குறைய 15 மாதங்களை நிறைவு செய்திருக்கிறது. இந்த குறுகிய காலத்தில் சுமார் 1 கோடி யூசர்கள் கூ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். டிவிட்டருக்கு மாற்றாக, கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்கும் தளமாக கூ இருந்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள கூ செயலி நிறுவனர்கள், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடிக்கும் அதிகமான யூசர்களை கூ சென்றடைய வேண்டும் என்பது தங்களுடைய முதன்மையாக இலக்கு எனத் தெரிவித்துள்ளனர்.
கூ செயலி, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளில் செயல்பட்டு வருகிறது. பிராந்திய மொழிகளின் பயன்பாடு இருப்பதால் யூசர்கள் அதிகளவில் கூ செயலியை பயன்படுத்துவார்கள் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமல்லாது நைஜீரியாவிலும் இந்த செயலி பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. குறிப்பாக நைஜீரிய அரசு ட்விட்டருக்கு தடை விதித்ததிலிருந்து அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் அனைத்தும் இந்த செயலி மூலமாகவே வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.