நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் கடந்த ஆண்டு நடந்த தற்கொலைகள் அடிப்படையில் ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேசிய குற்ற ஆவண பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1,63,033 பேர் தற்கொலை செய்து கொண்டதாக பதிவாகியுள்ளது. இதில் அதிக தற்கொலைகள் அடிப்படையில் மராட்டிய மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து 18, 925 தற்கொலைகளுடன் தமிழ்நாட்டிற்கு 2-வது இடத்தில் உள்ளது. மொத்த தற்கொலையில் இது 11.5 சதவீதம் ஆகும். மத்தியபிரதேசம் 14,965 தற்கொலைகள், மேற்கு வங்காளம் (13,500), கர்நாடகா (13,056) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
மேலும் தொழில், பணி தொடர்பான பிரச்சினைகள், தனிமை உணர்வு, வன்முறை, குடும்ப பிரச்சினைகள், மனநல பிரச்சினைகள், மதுவுக்கு அடிமை ஆகுதல், நிதி இழப்பு, நீண்டநாள் வலி ஆகியவை தற்கொலைக்கான முக்கிய காரணங்கள் என்று தேசிய குற்ற ஆவண பிரிவு கூறியுள்ளது.