திருமங்கலத்தில் சாமி கும்பிடுவதற்கு இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் கோவிலில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஆதி சிவலிங்கம் மற்றும் காட்டு கருப்பண்ணசாமி என்ற இருதரப்பு கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளது . கடந்த ஐந்து ஆண்டுகள் வரை இரு தரப்பினரும் ஒன்றாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த பூசாரி தான் தினமும் சுவாமிகளுக்கு பூசைசெய்து வந்துள்ளார். இதனால் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களையும் பூசாரியாக நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் . இதனைத் தொடர்ந்து இருதரப்பினற்கு இடையே தகராறு ஏற்பட்டதால் நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள் .
இதில் கருப்பண்ணசாமி கோவில் அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் , சிவராத்திரி பூஜைக்கு ஒரு சமூகத்தினர் வழிபாடு செய்வதற்காக தயாராகி வந்தனர் . இதனை மற்றொரு தரப்பினர் எதிர்த்துள்ளார்கள். இதனை அறிந்த அறநிலையத்துறை செயலர் மற்றும் மாவட்ட சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவிலை பூட்டிவிட்டு இரு தரப்பினரிடமும் சுவாமியை தரிசனம் செய்யலாம் ஆனால் எவரும் சொந்தம் கொண்டாட கூடாது என்று கூறியுள்ளார்கள். இதனால் கோவிலில் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.