நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கங்கள் தான்.
அதிலும் குறிப்பாக உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள். அவ்வாறு உடல் எடை கொண்டவர்கள் அதனை குறைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். அதற்கான எளிய டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உடல் எடையை குறைக்க விரும்புவோர், கேரட், புதினா மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து சிறிது நீர், எலுமிச்சைச் சாறு சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். தொடர்ந்து குடித்து வந்தால் கொழுப்புகள் விரைவாக கரையத் தொடங்கி உடல் எடை ஒரே வாரத்தில் குறையத் தொடங்கும். அதனைப்போலவே தக்காளி, புதினா மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.