தினமும் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்துவர விரைவில் உடல் எடை கூடும்.
பூசணிக்காய் சமைத்து தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர உடல் பருமனாகும்
கடலை, நேந்திரம் வாழைப்பழம்,பசும்பால், தினமும் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பெருக்கம் அடையும்.
நிலவாகை சமூலம் நிழலில் உலர்த்தி. பொடி செய்து இரண்டு கிராம் அளவு பசும் நெய்யில் சாப்பிட்டு வர உடல் பூரிக்கும்.
இளைத்தவர்களுக்கு இரும்பு சத்து அவசியம் அவர்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.
ஒல்லியாக உள்ளவர்களுக்கு கால்சியம் தேவை எனவே காலையில் முருங்கை வேர் பொடி சாப்பிட வேண்டும் .இரவில் கேழ்வரகு கஞ்சி குடிக்க வேண்டும்.