நம்மில் பெரும்பாலானோருக்கு இரவு நேரங்களில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது குறட்டை விடுவது. நாம் மட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ளவர்களும் அதனால் பாதிக்கப் படுகிறார்கள். குரட்டை உண்டாக என்ன காரணம் என்று தெரியுமா? சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கம் முற்று நாம் சுவாசிக்கின்ற போதே வீக்கத்தின் ஊடே காற்று செல்லும் போது ஏற்படும் அதிர்வு குறட்டை உண்டாகிறது. இதனை தடுக்க இயற்கை மருத்துவம் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை செய்தால் கட்டாயம் குறட்டையை நிறுத்தி விடலாம்.
தேவையான பொருட்கள்:
மஞ்சள், ஏலக்காய், தேன்
செய்முறை:
கால் ஸ்பூன் மஞ்சள்பொடி எடுத்துக் கொள்ளவும். இதில் ஏலக்காய் தட்டிப் போடவும். அதன் பிறகு ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இறுதியாக வடிகட்டி தேன் சேர்க்கவும். இதனை இரவு தூங்கப்போகும் முன்பு தினமும் 50 மில்லியளவு குடித்து வர குறட்டை ஒலி குறைந்துவிடும். சளிக்கு மருந்தாகவும் அமைகிறது. இந்த மருந்து நெஞ்சு சளியை குறைக்கும் என்பதும் கூடுதல் பலன் ஆகும்.