சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்வரன் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு, இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துள்ளார். பல்வேறு தடைகளையும், நெருக்கடிகளையும் கடந்து வெளியான இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது.
இந்த நிலையில் மாநாடு வெளியான ஒரே வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், உலகம் முழுக்க இதுவரை 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.