தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று முந்தைய வாரத்தை விட 11 சதவீதம் அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகரிப்பு உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகம். இதனிடையில் டிசம்பர் 20இல் இருந்து 26 வரையான வாரத்தில் 49.9 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வரும் வாரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து நாடுகளுக்கும் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.