Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே வாரத்தில் 140 பேர்…. தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரிப்பு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சாலையில் நடக்க விடாமல் தெருநாய்கள் விரட்டி கடிப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தெரு நாய்கள் பொதுமக்களை தெருவில் நடக்க விடாமல் விரட்டி விரட்டி கடிக்கின்றன. இதனை அடுத்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகளையும் தெரு நாய்கள் விரட்டி கடிப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஒரு வாரத்தில் மட்டும் தெரு நாய் கடித்ததாக கூறி சுமார் 140 பேர் வரிசையில் நின்று அரசு மருத்துவமனையில் ஊசி போடுகின்றனர். எனவே தெரு நாய்களிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |