தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.
மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் மாநிலம் முழுவதும் உள்ள 2,811 மின் அலுவலகங்களிலும் தொடங்கியது. இந்த முகாம்கள் வரும் டிச.31ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்பதால், கடந்த ஒரு வாரத்தில் 54.55 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைன் மூலமாக மின் இணைப்புடன் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். டிச.31ம் தேதியே கடைசி நாள் என்பதால் மக்கள் ஆர்வாக ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.