Categories
தேசிய செய்திகள்

ஒரே வார்டில் பிரசவம்…. மாறி போன குழந்தை…. யாருக்கு ஆண்…? யாருக்கு பெண்…? குழப்பத்தில் குடும்பத்தினர்…!!

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு பிறந்த குழந்தைகளை மாற்றி குடும்பத்தினரிடம் கொடுத்ததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது

மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் இரண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இருவரும் ஒரே வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் 2 பெண்களின் குடும்பத்தினரும் ஒரே இடத்தில் காத்திருந்தனர். ஒரு பெண்ணிற்கு ஆண் குழந்தையும் மற்றொரு பெண்ணிற்கு பெண் குழந்தையும் பிறந்தது.

இதனையடுத்து வார்டில் இருந்த செவிலியர் பெண் குழந்தை பெற்றெடுத்த பெண்ணின் குடும்பத்தினரிடம் ஆண் குழந்தையை தவறுதலாக கொடுத்துவிட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு தான் தவறாக குழந்தையை கொடுத்து விட்டோம் என்பதை உணர்ந்த செவிலியர் குடும்பத்தினரிடம் கூறி குழந்தையை வாங்குவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் குழந்தையை வாங்கிய குடும்பத்தினர் செவிலியரிடம் மறுப்பு தெரிவித்ததோடு குழந்தையை  கொடுக்கவும் சம்மதிக்கவில்லை.

இதனால் இந்தப் பிரச்சனையில் மருத்துவ கமிட்டி தலையிட்டு பெற்றோருக்கும் குழந்தைக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கான உத்தரவை பிறப்பித்தது. இரண்டு பெண்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததால் சில நாட்கள் மருத்துவமனையில் தான் அவர்கள் தங்கியிருக்க வேண்டும். அதற்குள் குழந்தை யாருடையது என்ற சந்தேகத்திற்கு பதில் கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |