விஜய் பட இயக்குனரை ஒரே வார்த்தையில் ஆப் செய்துள்ளார் தனுஷ்.
முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வெங்கடேஷ் இயக்கத்தில் ஜெய், ரீமாசென், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் தான் பகவதி. இத் திரைப்படத்தில் விஜய்யின் தம்பியாக ஜெய் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவரின் நடிப்பு பெரும் அளவில் பேசப்பட்டது.
இத்திரைப்படத்தில் முதலில் ஜெய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருந்தாராம். இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனரும் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவின் நண்பர்களாம். இதனால் இயக்குனர் வெங்கடேஷ் கஸ்தூரிராஜாவிடம் உங்களின் இளையமகன் என்னுடைய திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிக்க சொல்லுங்கள் என்று கேட்டதற்கு அவரும் ஒப்புக் கொண்டார். பின்னர் தனுஷிடம் இயக்குனரை சென்று பார்க்குமாறு கூறியுள்ளார் கஸ்தூரி ராஜ. தனுஷும் வெங்கடேஷை சென்று பார்த்துள்ளார்.
அப்போது வெங்கடேஷ் விஜய்யின் தம்பியாக நடிக்க வேண்டும் என கூறியதற்கு தனுஷ், “ஹீரோவாக நடிக்க கூப்பிடுவார்கள் என்று பார்த்தால் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க சொல்கிறீர்களே? எனக்கு இந்த கேரக்டர் செட் ஆகாது” என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். முன்னணி ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் முன்னணி ஹீரோவுக்கு தம்பியாக நடித்தால் இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்பதால் தனுஷ் மறுத்துள்ளார். இத்திரைப்படத்திற்கு பின் ஜெய் நடிகராக அவதாரம் எடுத்திருந்தார். தனுஷும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் குறிப்பிடத்தக்கது.