Categories
மாநில செய்திகள்

“ஒரே வீட்டில்!” மூவர்… இளைஞரை வற்புறுத்திய பெண்… கணவர் இல்லாத நேரத்தில் நடந்த கொடூரம்…!!

டெல்லியில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியை சேர்ந்த தம்பதிகள் சாகிர் கான் மற்றும் ஹீனா இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இத்தம்பதிகளுக்கு பழக்கமான சுமித் குமார் என்ற 21 வயதுடைய இளைஞரும் இவர்களுடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹீனா மற்றும் சுமித் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஹீனா என் கணவரை நான் பிரிந்துவிடுகிறேன்.

நீ என்னை திருமணம் செய்து கொள் என்று சுமித்தை கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால் சுமித் ஹீனா தன்னை விட 11 வயது மூத்தவர் என்பதால் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஹீனாவை கொலை செய்ய முடிவு செய்த சுமித் அவரின் நண்பர்களான அருண், அமித்  ரவி ஆகிய மூவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஹீனாவின் வீட்டில் பணம் நகைகள் நிறைய உள்ளது.

எனவே அவரை கொலை செய்துவிட்டு பணத்தை கொள்ளையடிக்கலாம் என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு சாகிப் கான் வீட்டில் இல்லாத நேரத்தில் சில நாட்களுக்கு முன்பு ஹீனாவின் கழுத்தை நெரித்து விட்டு, அவர் உயிரிழந்ததாக நினைத்துள்ளனர். அப்போது அருண் ஹீனா இன்னும் சாகவில்லை அவருக்கு உயிர் இருக்கிறது என்று கூறியுள்ளார். அதன்பின்பு சுமித் கத்தி எடுத்து வந்து ஹீனாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அதன் பிறகு வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். ஆனால் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினரிடம் சுமித் சிக்கவில்லை. எனினும் அவர் அந்த வீட்டிற்கு திரும்ப வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹீனாவை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது  அவர் பதற்றத்தில் நடந்தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பிறகு சுமித் மற்றும் அவரின் நண்பர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |