Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஒரே வீட்டில் 3 பேர் தற்கொலை: திடீர் திருப்பம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டம் மலையனூர் பகுதியில் சிவகுருநாதன் மற்றும் சுமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு சுமதி உயிரிழந்த நிலையில் சுமதி உயிரிழப்பதற்கு முன்பே சிவகுருநாதன் சென்னையில் தங்கி ஒரு மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் ஓனருடன் பழக்கம் ஏற்பட்டு பின்பு அது காதலாக மாறியுள்ளது. இவர்கள் திருமணம் செய்யாமலையே குழந்தை பெற்றுக் கொண்டனர். சுமதி உயிரிழந்த பிறகு மலையனூர் வந்து தங்கிய சிவகுருநாதன் அதன் பிறகு சென்னை செல்லவில்லை. இதனால் அவரின் சென்னை மனைவி குழந்தை மற்றும் மாமியார் ஆகியோர் மலையனூர் வந்து தங்கி இருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை இவர்கள் மூவரின் சடலமும் பெருமாள் கோவில் அருகே உள்ள கிணற்றிலிருந்து கண்டறியப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |